உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிராம கோயில்களில் கும்பாபிஷேகம்

கிராம கோயில்களில் கும்பாபிஷேகம்

ரெகுநாதபுரம்: ரெகுநாதபுரம் தேவி முத்து நாச்சியம்மன் கோயிலில் நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. ஆக., 28ல் முதல் கால யாகசாலை பூஜையுடன் விழா துவங்கியது. ரக் ஷா பந்தன், கடஸ்தாபனம் உள்ளிட்டவைகள் நடந்தது.

நான்காம் கால யாகசாலை பூஜைக்கு பிறகு நேற்று காலை 10:30 மணிக்கு தேவி முத்து நாச்சிஅம்மன், கருப்பண்ணசாமி, கோட்டை முனீஸ்வரர் கோயில் கோபுர விமான கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.

சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை செய்யப்பட்டது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை யாதவர் மற்றும் அகமுடையார் சமூக மக்கள் செய்திருந்தனர்.

*திருப்புல்லாணி அருகே உத்தரவை ஊராட்சி ராமன் ராமாயி தோட்டத்தில் உள்ள கள்ளழகர் கோயிலில் நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. ஆக., 29ல் முதல் கால யாகசாலை பூஜையுடன் விழா துவங்கியது.

நேற்று காலை கோ பூஜை, லட்சுமி பூஜை உள்ளிட்ட இரண்டாம் கால யாகசாலை பூஜைக்கு பிறகு கடம் புறப்பாடு நடந்தது. ‘கோவிந்தா’ கோஷம் முழங்க கள்ளழகர் கோபுர விமான கலசத்தில் சிவாச்சாரியார் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தார். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை விழா கமிட்டியாளர்கள் செய்திருந்தனர்.

*திருப்புல்லாணி அருகே தினைக்குளம் ஊராட்சி மொங்கான்வலசையில் கும்பாபிஷேகம் நடந்தது. ஆக., 29ல் முதல் கால யாகசாலை பூஜையுடன் விழா துவங்கியது.

நேற்று காலை 10:30 மணிக்கு தினை கணபதி, காந்தாரியம்மன் கோயில் கோபுர விமான கலசத்தில் சிவாச்சாரியார் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தார். சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது.

அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை மொங்கான்வலசை தினைக்குளம் முத்தரையர் சங்கத்தினர் செய்திருந்தனர்.

*திருப்புல்லாணி அருகே குதக்கோட்டை சத்யபாமா ருக்மணி சமேத கல்யாண கிருஷ்ணன் கோயிலில் நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. நேற்று முன்தினம் முதல் கால யாகசாலை பூஜையுடன் விழா துவங்கியது.

நேற்று காலை 9:30 மணிக்கு கோயில் கோபுரமான கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை குதக்கோட்டை கிராம மக்கள் செய்திருந்தனர்.

*ராமநாதபுரம் அருகே தெற்கு காட்டூர் ராஜ மாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா நடந்தது.

நேற்று காலை ராஜ விநாயகர் கோயிலில் பூஜை செய்து, யாகசாலையில் வைத்திருந்த கடம் புறப்பாடாகி கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபி ஷேகம் நடந்தது.

அம்மனுக்கு கும்பநீர் அபிஷேகம் செய்து அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. சுற்றுவட்டார கிராம மக்கள் பங்கேற்றனர்.

*முதுகுளத்துார் அருகே அரப்போது கிராமத்தில் வலம்புரி மகாகணபதி, சிவசக்தி காமாட்சி அம்மன், பெரியசாமி, கருப்பணசாமி கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. சிவாச்சாரியார்கள் தலைமையில் கும்பநீர் ஊற்றப்பட்டது.

சிவசக்தி காமாட்சி அம்மன், மகாகணபதி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு பால், சந்தனம், மஞ்சள் உட்பட பொருட்களால் அபிஷேகம், தீபாராதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.

*ஆர்.எஸ்.மங்கலம் அருகே காவனுார் மீனாட்சி அம்மன், முத்து மாரியம்மன், முத்தாயி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.

முன்னதாக, கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி பூஜைகள் நடந்தன.

முதல் மூன்று கால யாகசாலை பூஜைக்கு பின் யாகசாலையில் பூஜை செய்யப்பட்ட புனித நீர் கோயில் கோபுரத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை கிராமத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !