சிங்கார பேட்டைமுருகன் கோவிலில் கும்பாபிஷேகம்
ADDED :5 days ago
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அடுத்த சிங்கார பேட்டைமுருகன் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.
விக்கிரவாண்டி அடுத்த மூங்கில்பட்டு ஊராட்சி, சிங்காரபேட்டை, முருகன் கோவில் கிராம பொதுமக்களால் புதுப்பிக்கப்பட்டது. இதையொட்டி நேற்று முன்தினம் காலை கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜை துவங்கியது.
நேற்று காலை 10:00 மணிக்கு, இரண்டாம் கால யாக சாலை பூஜைகள் முடிந்து கலச புறப்பாடு நடந்தது.
தொடர்ந்து, கோவில் கலசத்திற்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. மூங்கில்பட்டு, சிங்கார பேட்டை மற்றும் சுற்றுப்புற கிராம பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்தனர் .