உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திரவுபதி அம்மன் கோவிலில் அக்னி வசந்த பெருவிழா

திரவுபதி அம்மன் கோவிலில் அக்னி வசந்த பெருவிழா

செஞ்சி: திரவுபதி அம்மன் கோவில் அக்னி வசந்த பெருவிழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

செஞ்சி அடுத்த கணக்கன்குப்பம் கிராமத்தில் திரவுபதி அம்மன் கோவில், 160 ம் ஆண்டு அக்னி வசந்த பெருவிழா கடந்த, 3 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

தொடர்ந்து, மகாபாரத சொற்பொழிவு, இன்னிசை கச்சேரி, வான வேடிக்கை, அம்மன் திருவீதி உலா, நாடகம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.

இதையடுத்து கடந்த, 22 ம் தேதி திரவுபதி அம்மன் திருக்கல்யாணம், 27 ம் தேதி திருவிளக்கு பூஜை, பால் குடம் எடுத்தல் நிகழ்ச்சிகள் நடந்தன. மேலும், 28 ம் தேதி யாகம் வளர்த்து வழிபட்டனர். மாலை தீ மிதி விழா நடந்தது.

இதில் நூற்றுக்கணக்கானவர்கள் தீ மிதித்து நேர்த்தி கடன் செலுத்தினர். நேற்று இரவு 7:00 மணிக்கு தருமர் பட்டாபிஷேகம் நடைபெற்றது.

கணக்கன்குப்பம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !