உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / எல்.ஆர். பாளையம் முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

எல்.ஆர். பாளையம் முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

கண்டமங்கலம்: கண்டமங்கலம் ஒன்றியம், எல்.ஆர். பாளையம் கிராமத்தில் முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.

இந்த சிறப்பு வழிபாடு, கடந்த 28ம் தேதி காலை 9:00 மணிக்கு மகா கணபதி ஹோமத்துடன் தொடங்கி, புதிய சுவாமி கரிக்கோலம் நடந்தது. மாலை 5;00 மணிக்கு காப்பு கட்டுதல், கும்ப அலங்காரம், யாக சாலை பிரவேசம், முதல் கால யாக பூஜை நடந்தது.

தொடர்ந்து, 29ம் தேதி காலை 8:45 மணிக்கு இரண்டாம் காலயாக பூஜையும், மாலை 5:00 மணிக்கு மூன்றாம் கால பூஜையும் நடந்தது.

நேற்று விநாயகர் பூஜை, கோ பூஜை, சுவாமிகளுக்கு காப்பு கட்டுதல், நாடி சந்தானம், மூல மந்திர காயத்ரி ஹோமங்கள், தீபாராதனை ஆகியவை நடந்தது. காலை 9:00 மணிக்கு யாத்ரா தானம், கடம் யாக சாலையில் இருந்து புறப்பட்டது.

தொடர்ந்து காலை 9:30 மணிக்கு முத்துமாரியம்மன் விமான கும்பாபிஷேகம், காலை 10:00 மணிக்கு முத்துமாரியம்மன் மூலவர் பரிவார சுவாமிகள் கும்பாபிஷேகம் நடந்தது. விழாவில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமிகளை தரிசித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !