தட்டாஞ்சாவடி காளியம்மன் கோவில் பிரம்மோற்சவத்தில் பால்குட ஊர்வலம்
பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த தட்டாஞ்சாவடி காளியம்மன் கோவில் 66 ம் ஆண்டு பிரம்மோற்சவம் கடந்த 27 ம் தேதி கொடியேற்றத்துடுன் தொடங்கியது. மறுநாள் சாகைவார்த்தலும், மாலை திருவிளக்கு பூஜை நடந்தது.
இன்று 2ம் தேதி காலை பால்குட ஊர்வலம் நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் பால்குடம் ஏந்தி ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து அம்மனுக்கு பாலாபிேஷகம் நடந்தது. மாலை பூப்பல்லக்கில் அம்மன் வீதியுலா நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இன்று மாலை மகிஷாசூர சம்ஹார நிகழ்ச்சியும், அம்மன் வீதியுலா நடக்கிறது. நாளை 4 ம்தேதி வெள்ளிக்கிழமை காலை 7:00 மணிக்குமேல் கெடில நதிக்கரையில் இருந்து கரகம் ஜோடித்து ஊர்வலமாக கொண்டு வரப்படுகிறது. தொடர்ந்து மதியம் செடல் உற்சவமும், மாலை 4:30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. வரும் 5ம் தேதி இரவு 7:00 மணிக்கு மஞ்சள் நீர் உற்சவம், வரும் 11ம் தேதி மாலை 5:00 மணிக்கு விடையாற்றி உற்சவம் நடக்கிறது.