/
கோயில்கள் செய்திகள் / கங்கையில் கரைபுரண்டோடும் பெருவெள்ளம்; அடித்து செல்லப்பட்ட சைதி துர்கா கோவில்
கங்கையில் கரைபுரண்டோடும் பெருவெள்ளம்; அடித்து செல்லப்பட்ட சைதி துர்கா கோவில்
ADDED :2 minutes ago
பீஹார்: பீஹார் மாநிலம் கங்கை ஆற்றில் பெருவெள்ளம் கரைபுரண்டோடும் நிலையில், கரையோரத்தில் இருந்த 100 ஆண்டு பழமையான சைதி துர்கா கோவில் நீரில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் பக்தர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
பீஹார் மாநிலம் பாகல்பூர் மாவட்டத்தில், கங்கை நதியில் ஏற்பட்ட கரைபுரண்டோடும் வெள்ளப்பெருக்கு காரணமாக 100 ஆண்டுகள் பழமையான சைதி துர்க்கை கோயில் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டது. வரலாற்றுச் சிறப்புமிக்கஇந்த கோவில் பெருவெள்ளம் மற்றும் பலத்த மண் அரிப்பால் ஆற்றுத் தண்ணீருக்குள் சரிந்து மூழ்கியது. இதை கண்ட கிராம மக்கள் மற்றும் பக்தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.