உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கடலுார் துறைமுகம் கோபால கிருஷ்ண சுவாமி கோவில் ஸம்ப்ரோக்ஷணம்

கடலுார் துறைமுகம் கோபால கிருஷ்ண சுவாமி கோவில் ஸம்ப்ரோக்ஷணம்

கடலுார்: கடலுார் துறைமுகம் கோபால கிருஷ்ண சுவாமி கோவில் ஸம்ப்ரோக்ஷணத்தில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

கடலுார் துறைமுகம், காமாட்சி அம்மன் கோவில் தெரு கோபால கிருஷ்ண சுவாமி கோவில் ஸம்ப்ரோக்‌ஷண விழாவையொட்டி கடந்த 28ம் தேதி காலை பெண்ணையாற்றில் இருந்து தீர்த்தம் கொண்டு வருதல், யாக சாலை பிரவேசம், ரக்‌ஷாபந்தனம், முதல் கால ேஹாமம், பூர்ணாகுதி, மாலை மூலவர் கருடன், ஆஞ்சநேயர் எந்திர ஸ்தாபனம், அஷ்டபந்தனம் சாற்றுதல், இரண்டாம் கால ேஹாமம் நடந்தது.

29ம் தேதி திருப்பாவை சாற்றுமுறை, மூன்றாம் கால ேஹாமம், விமான கலசங்கள் ஸ்தாபனம், நான்காம் கால ேஹாமம் நடந்தது.

நேற்று காலை கோ பூஜை, 5ம் கால ேஹாமம், மகா பூர்ணாகுதி, யாத்ராதானம், கும்பங்கள் புறப்பாடாகி மன்னார்குடி செண்டலாங்கார செண்பகமன்னார் ஜீயர் சுவாமிகள் மங்களாசாசனத்துடன் கோபுரத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.

ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !