உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புவனகிரி ராகவேந்திரர் அவதார இல்லத்தில் ஆராதனை விழா

புவனகிரி ராகவேந்திரர் அவதார இல்லத்தில் ஆராதனை விழா

புவனகிரி: புவனகிரி ராகவேந்திரர் அவதார இல்லத்தில் ஆராதனை விழா துவங்கியது.

புவனகிரியில் மகான் ராகவேந்திரர் பிறந்த அவதார இல்லம், கோவிலாக நிர்மாணிக்கப்பட்டு, சிறப்பு வழிபாடுகள் நடந்து வருகிறது. ஆண்டுதோறும் அவரது இல்லத்தில், ஆராதனை விழா சிறப்பாக நடத்தி வருகின்றனர்.

தற்போது 39ம் ஆண்டு ஆராதனை விழா, பூர்வ ஆராதனையுடன் துவங்கியது. மந்திராலய மரபு படி, அபிஷேகம், அலங்காரம், தீபாராதனையுடன் நடந்தது.

அறக்கட்டளை கவுரவ தலைவர் சுவாமிநாதன், தலைவர் கயிலை ராமநாதன், செயலார் உதயசூரியன், பொருளாளர் கதிர்வேல் உள்ளிட்ட விழா குழுவினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர். அர்ச்சகர் ரமஷே் உள்ளிட்ட குழுவினர் பூஜைகளை செய்தனர்.

புண்ணிய ஆராதனையும், இன்று (31ம் தேதி) உத்தர ஆராதனையும் நடக்கிறது. மூன்று நாட்களும் அதிகாலை சுப்ரபாதமும், வேத பாராயணம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகளுடன் நிகழ்ச்சி நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !