51 அடி உயர முருகன் கோவில் கும்பாபிஷேகம்
ADDED :2 days ago
கடலுார்: கடலுார் அடுத்த அயன் ராமாபுரம் 51 அடி உயர முருகன் கோவில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
கடலுார் அடுத்த அயன் ராமாபுரம் 51 அடி உயர குருகுகன் முருகன் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி கடந்த 28ம் தேதி அனுக்ஞை, கணபதி பூஜை, வாஸ்து சாந்தி, ரக்ஷாபந்தனம், யாகசாலை பிரவேசம், முதல் கால யாக பூஜை நடந்தது.
29ம் தேதி இரண்டாம் கால யாக பூஜை, மூன்றாம் கால யாக பூஜை, அஷ்ட பந்தன மருந்து சாற்றுதல் நடந்தது.
நேற்று காலை நான்காம் கால யாக பூஜை, வேதபாராயணம், நாடிசந்தானம், தத்துவார்ச்னை, யாத்ராதானம், கடம் புறப்பாடாகி கும்பாபிஷேகம் நடந்தது.
இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.