கோவை வியாசராஜர் மடத்தில் ஸ்ரீ ராகவேந்திரர் ஆராதனை
கோவை; ரங்கே கவுடர் வீதியில் அமைந்துள்ள பழமையான ஸ்ரீ வியாசராஜர் மடத்தில் ஸ்ரீ ராகவேந்திரர் ஆராதனை கடந்த 29.08-2026 அன்று துவங்கி நடைபெற்று வருகிறது. இதன் முதல் நிகழ்வாக காலை 7 மணியளவில் மூலவர் ஸ்ரீ ராகவேந்திரர் மற்றும் ஆஞ்சநேயருக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் நடந்தது அதனை தொடர்ந்து உபன்யாசம் நடந்தது. மதியம் 12 மணியளவில் தீபாராதனை நடைபெற்றது தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இரண்டாம் நாள் ஞாயிற்றுக்கிழமை முதல் நாள் போலவே நிகழ்ச்சிகள் நடந்தன. நிறைவு நாளான மூன்றாம் நாள் திங்கட்கிழமை மூலவர் ஸ்ரீ ராகவேந்திரர் மற்றும் ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை அபிஷேகம் நடந்தது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஆஞ்சநேயர் மற்றும் ஸ்ரீ ராகவேந்திரரை தரிசனம் செய்தனர் இதில் ஸ்ரீ ராகவேந்திரர் மற்றும் ஆஞ்சநேயர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர் நிகழ்ச்சியின் நிறைவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.