மதுரை லெட்சுமிபுரம் அரசமரம் பிள்ளையார் கோவில் மஹா கும்பாபிஷேகம்
ADDED :4 days ago
மதுரை; லெட்சுமிபுரம் 5வது தெருவில் இரட்டை பிள்ளையார் கோவில் என்று அழைக்கப்படும் லெட்சுமிபுரம் அரசமரம் பிள்ளையர் கோவில் உள்ளது. இக்கோவிலில் 15 ஆண்டுக்கு பின்னர் இரட்டை கணபதி ஆலய விமான ஜீர்ணோத்தாரன அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் விழா மூன்று கால பூஜைக்கு பின்னர் நடைபெற்றது. காலை 09:15 முதல் 10:15 மணிக்குள்ளாக துலா லக்கனத்தில் மங்கல வாத்தியங்கள் முழங்க கும்பத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு பக்தர்களுக்கு தீர்த்த தெளிக்கப்பட்டது. கோவிலின் கும்பாபிஷேக ஏற்பாட்டு பணிகளை பிள்ளையர் கோவிலின் நிர்வாக தலைவர் அமர்நாத், உப தலைவர் குபேந்திரன்,குபேந்திரனாத், கெளரவ தலைவர் சரவணன், சட்ட ஆலோசகர் சுதர்ஸன்பாபு உள்ளிட்டோர் மேற்கொண்டனர்.