அன்னூர் வரதராஜ பெருமாள், மகாகணபதி கோவிலில் கும்பாபிஷேகம்
அன்னூர்: எல்லப்பாளையம், வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடந்தது.
எல்லப்பாளையத்தில் உள்ள பழமையான, ஸ்ரீ ஆதிமூல விநாயகர், ஸ்ரீதேவி பூதேவி சமேத, வரதராஜ பெருமாள் மகாகணபதி கோவிலில் பல லட்சம் ரூபாய் செலவில் பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டன. இதையடுத்து கும்பாபிஷேக விழா கடந்த 30ம் தேதி விக்னேஸ்வர பூஜை உடன் துவங்கியது. முளைப்பாரி மற்றும் தீர்த்த குடங்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன. விமான கலசங்கள் நிறுவப்பட்டன. இன்று அதிகாலை வேள்வி பூஜை நடந்தது. காலை 7:30 மணிக்கு ஆதி மூல விநாயகர், மகா கணபதி மற்றும் ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாளுக்கு புனித நீரூற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இதையடுத்து, பெருமாள் மற்றும் விநாயகருக்கு, மகா அபிஷேக பூஜை, தீபாராதனை, தச தரிசனம் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. எல்லப்பாளையம் கலைஞர்களின் பக்தி பஜனை நடனத்துடன் நடந்தது. கும்பாபிஷேக விழாவில், தேவாங்க குல மக்கள் உள்பட சுற்றுவட்டாரத்தை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.