உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விழுப்புரம் பெரியாண்டவர் கோவிலில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம்

விழுப்புரம் பெரியாண்டவர் கோவிலில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம்

விழுப்புரம்; விக்கிரவாண்டி வட்டம் கொங்கராம்பூண்டி கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ பெரியாண்டவர் கோவில் பரிவார தேவதை ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் இன்று சிறப்பாக நடைபெற்றது.


புகழ் வாயந்த பஞ்சபூதஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திருவண்ணாமலை ஸ்ரீ அருணாச்சல ஈஸ்வரர் ஆலயத்திற்கு கிழக்கேயும் திருவக்கரை ஸ்ரீ சந்திரமௌலிஸ்வரர் ஆலயத்திற்கு மேற்கேயும் நடு நாயகமாய் விளங்கும் புண்ணிய பூமி கொங்கராம்பூண்டி கிராமத்தில் பெரியாண்டவர் ஆலயம். இக்கோவிலில் திருப்பணி முடிவடைந்த நிலையில் இன்று (31-08-2026) திங்கட்கிழமை ரேவதி நட்சத்திரதில் காலை 9.00 மணிக்குமேல் 10.30 மணிக்குள் ஸ்ரீ பெரியாண்டவர் மற்றும் பரிவார தேவதை அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றம் கொங்கராம்பூண்டி பொதுமக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !