கொண்டல் சித்தி விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேக விழா
மயிலாடுதுறை; சீர்காழி அருகே கொண்டல் பத்தக்குடி கிராமத்தில் சித்தி விநாயகர் கோவில் புதிதாக கட்டப்பட்டு அதற்கான கும்பாபிஷேக விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு கடந்த 28ம் தேதி விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், லஷ்மி ஹோமம், நவகிரக ஹோமம் அதனை தொடர்ந்து வாஸ்து சாந்தி முதற்கால பூர்ணாஹூதி தீபாராதனை நிகழ்ச்சியும். அதனை தொடர்ந்து மறுநாள் 30 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரண்டாம் கால யாக பூஜையும் பின்னர் மாலை மூன்றாம் கால யாகசாலை பூஜையுடன் ஆரம்பமானது. அதனை தொடர்ந்து நேற்று காலை கும்பாபிஷேக விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு கோ பூஜை நான்காம் காலயாக சாலை பூஜைகள் துவக்கம் மண்டப ஆராதனை நிகழ்ச்சியும். நான்காம் கால பூர்ணாஹூதி தீபாராதனை நிகழ்ச்சியும் அதனைத் தொடர்ந்து கடம் புறப்பட்டு மேலதாளங்கள் முழங்க வான வேடிக்கையோடு சித்தி விநாயகர் விமான கும்பாபிஷேகமும், விளையாட்டு மூலவர் சித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேகம நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மகா தீபாராதனை நிகழ்வு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த விழாவில் திமுக ஒன்றிய கழக செயலாளர் பிரபாகரன், திமுக மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் முருகன், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் விஜயேஸ்வரன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை பத்தக்குடி கொட்டாயமேடு கிராமவாசிகள் செய்திருந்தனர்.