அகோபில வரதராஜ பெருமாள் கோயிலில் ஆவணி பிரம்மோற்ஸவ தேரோட்டம்
பாலசமுத்திரம்: பழநி, பாலசமுத்திரம், அகோபில வரதராஜ பெருமாள் கோயிலில் ஆவணி பிரம்மோற்ஸவ திருவிழாவில் தேரோட்டம் நடந்தது.
பழநி முருகன் கோயில் நிர்வாகத்திற்கு உட்பட்ட பாலசமுத்திரம், அகோபில வரதராஜ பெருமாள் கோயிலில் ஆக.23., காலை கோயிலில் கொடியேற்றம் நடைபெற்று விழா துவங்கியது. ஆக.29., மாலை ஸ்ரீதேவி,பூதேவி அகோபில வரதராஜ சுவாமிக்கு திருக்கல்யாண உற்ஸவம் நடந்தது. ஆக.30., இரவு பாரிவேட்டை நடந்தது. நேற்று (ஆக.31.,) காலை சுவாமி தேரேற்றம் நடந்து 7:15 மணிக்கு தேரோட்டம் நடந்தது. அதன் பின் தேர்கால் பார்த்தல் நடந்தது. சுவாமி தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்று பக்தர்கள் பலர் வழிபட்டனர். தேரோட்டத்தில் கோயில் இணை கமிஷனர் வெங்கடேஷ், கண்காணிப்பாளர் அழகர்சாமி உட்பட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். பிரம்மோற்சவ திருவிழா நாட்களில் பவளக்கால் சப்பரம்,அனுமார் வாகனம், கருட வாகனம், தோளூக்கினியாள், சேஷ வாகனம் ஆகியவற்றில் சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது. இன்று (செப்., 1) கொடி இறக்கம் நடைபெறும். செப்.2., விடையாற்றி உற்ஸவத்திற்கு பிறகு பிரம்மோற்சவ விழா நிறைவடையும்.