கருப்பாய் சுவாமி கோவில் கும்பாபிஷேகம்; ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
அனுப்பர்பாளையம்: திருப்பூர், அனுப்பர்பாளையம் புதூரில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ விநாயகர், ஶ்ரீ கருப்பராய சுவாமி, ஶ்ரீ கன்னிமார் சுவாமி ஆகிய திருக்கோவில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா கடந்த மாதம் ஆக 26 ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி, நேற்று 30 ம் தேதி காலை மங்கள இசை, இரண்டாம் கால யாக பூஜை, விசேஷ சந்தி மண்டபார்ச்சனை, மதியம் கோபுரத்தில் கலசம் வைத்தல், அஷ்டபந்தன மருந்து சாத்துதல், மாலை மூன்றாம் கால யாக பூஜை, தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் உள்ளிட்டவை நடைபெற்றது. இன்று 31 ம் தேதி காலை நான்காம் கால யாக பூஜை, நடைபெற்றது அதனை தொடர்ந்து, 9:00 மணிக்கு மேல் 10:30 மணிக்குள் ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ கருப்பராய சுவாமி, ஸ்ரீ கன்னிமார், ஆகிய சுவாமிகளுக்கு அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது நடைப்பெறுகிறது. விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, சாமியை தர்சித்தனர். தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை ஊர் பொது மக்கள், கோவில் கமிட்டியினர் செய்து இருந்தனர்.