மானாமதுரை சித்தி விநாயகர் கோயிலில் பாலாலய பூஜை
மானாமதுரை: வேம்பத்தூரில் மிகப்பழமை வாய்ந்த சித்தி விநாயகர் கோயிலில் நடைபெற்ற பாலாலய பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மானாமதுரை அருகே வேம்பத்தூரில் உள்ள மிகப்பழமை வாய்ந்த சித்தி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு நேற்று காலை பாலாலய பூஜைக்காக விநாயகருக்கு 18 வகையான மூலிகை பொருட்களால் திருமஞ்சனம் நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து கோயில் முன்பாக சிவாச்சாரியார்களால் புனிதநீர் அடங்கிய கடங்களை வைக்கப்பட்டு ஹோமங்கள் வளர்க்கப்பட்டு அபிஷேக, ஆராதனைகள், சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் புனித நீர் அடங்கிய கடங்களை கோயிலை சுற்றி வலம் வந்து விநாயகருக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை நடந்தது. பாலாலய பூஜை விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.இதனைத் தொடர்ந்து மானாமதுரையை சேர்ந்த ஸ்தபதி பாண்டி தலைமையில் திருப்பணிகள் துவங்கப்பட்டன.