வழுவூர் முத்துமாரியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்; ஏராளமான பக்தர்கள் வழிபாடு
மயிலாடுதுறை; வழுவூர் முத்துமாரியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம். ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா வழுவூர் வடக்கு தெருவில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவையொட்டி நேற்று வழுவூர் வீரட்டேஸ்வரர் கோயிலில் இருந்து புனிதநீர் யானை மீதேற்றி ஊர்வலமாக கோயிலுக்கு எடுத்துவரப்பட்டது. தொடர்ந்து இரண்டு கால யாகசாலை பூஜை நடைபெற்றது. இன்று காலை நடைபெற்ற இரண்டாம் கால யாகசாலை பூஜை நிறைவில் மகா பூர்ணாகுதி செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கடங்களை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து கோயிலை வளம் வந்து விமான கும்பத்தை அடைந்தனர். அங்கு வேத விற்பன்னர்கள் வேத மந்திரங்களை ஓத மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில், மயிலாடுதுறை மாவட்ட பால் விற்பனையாளர்கள் சங்க தலைவர் மணிகண்டன் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.