சந்தோஷப்படு என்கிறார் ஷீரடி சாய்பாபா
* பிறருடைய மகிழ்ச்சியைக் கண்டு சந்தோஷப்படு.
* நல்ல சிந்தனை இருந்தால் நிம்மதி தானாக வரும்.
* உண்மை எது என்பதை கண்டறிவதே விவேகம்.
* சண்டை வேண்டாம். இல்லாவிட்டால் அமைதி கெடும்.
* உன்னை விமர்சிக்கும் இடத்தை விட்டு விலகி விடு.
* யாரிடமும் பதிலுக்கு பதில் பேசாதே. மவுனமாக இரு.
* ஆணவத்தை கைவிடு. ஆர்வமுடன் பணியில் ஈடுபடு.
* எளிய ஆடை உடுத்துவதில் விருப்பம் கொள்.
* பணம் இல்லாமல் வாழ முடியாது. அதற்காக கஞ்சனாக இருக்காதே.
* சம்பாதிக்கும் பணத்தில் இரண்டு சதவீதமாவது தர்மம் செய்.
* பசித்தவருக்கு உணவு கொடுத்த பிறகு சாப்பிடு.
* சுவாசிப்பது மட்டும் வாழ்க்கையல்ல.
சேவை செய்வதே வாழ்க்கை.
* பணத்தால் செய்த வினைப்பயனை
தடுக்க முடியாது.
* குறிக்கோள் உள்ளவர்கள் மங்காத புகழுடன் வாழ்வர்.
* ஏற்றுக் கொண்ட கொள்கையை விட்டு விலகாதே. * இன்ப துன்பம் மாறி மாறி வரும். ஆனால் நிலைப்பதில்லை.
* மனிதப்பிறவி மகத்தானது. அதை உணர்ந்து பணியாற்று.