சோமண்டார்குடி மாரியம்மன் கோவில் தேர் திருவிழா
ADDED :1 hours ago
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அடுத்த சோமண்டார்குடியில் உள்ள பழமை வாய்ந்த மாரியம்மன் கோவிலில் தேர்த் திருவிழா நேற்று நடந்தது. விழா, கடந்த மாதம் 25ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து மதுரை வீரனுக்கு பொங்கல் வைத்தல், மாரியம்மனுக்கு ஊரணி பொங்கல் வைத்தனர். தினமும் அம்மன் வீதியுலா நடந்தது. முக்கிய விழாவான தேர்த்திருவிழா நேற்று நடந்தது. அதனையொட்டி காலை 8:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட அம்மன் தேரில் எழுந்தருளச் செய்யப்பட்டு சுற்றுப் பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.