போடி சீனிவாசப் பெருமாள் கோயிலில் கிருஷ்ணன் ஜெயந்தி விழா கோலாகலம்
ADDED :2 days ago
போடி: கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு போடி சீனிவாசப் பெருமாள் கோயிலில் மூலவர் சீனிவாசப் பெருமாள் குருவாயூர் கிருஷ்ணர் தங்க கவச அலங்காரம், பெருமாள் சந்தான கோபாலகிருஷ்ணன் அலங்காரத் திலும் பெருமாளுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளின் தரிசனம் பெற்றனர். சுவாமி அலங்காரத்தினை கார்த்திக் பட்டாச்சாரியார் செய்திருந்தார். குழந்தைகள் கிருஷ்ணன் வேடம் அணிந்து வந்து பெருமாளின் தரிசனம் பெற்றனர்.
* போடி திருமலாபுரம் ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோயிலில் சலவை கல்லில் ஆன கிருஷ்ணருக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராத னைகள் நடந்தது. ஏராளமான பக்தர் கள் கலந்து கொண்டு கிருஷ்ணரின் தரிசனம் பெற்றனர். குழந்தைகள் கிருஷ்ணர், ராதை வேடம் அணிந்து வந்தனர்.