உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் கோயிலில் உறியடி திருவிழா

வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் கோயிலில் உறியடி திருவிழா

வடமதுரை: வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு உறியடி திருவிழா நடந்தது. சன்னதியில் இருந்து புறப்பட்ட பெருமாள் நான்கு ரத வீதிகள் வழியே நகரை வலம் வந்தார். தேரடி மைதானத்தில் உறியடி திருவிழாவும், வழக்கு மரம் ஏறும் நிகழ்ச்சியும் நடந்தது. விழா ஏற்பாட்டினை சவுந்தரராஜ பெருமாள் கோயில் சீர்பாதம் குழுவினர், காளியம்மன் கோயில் சேவார்த்திகள் செய்திருந்தனர். சுற்று வட்டார மக்கள் திரளாக பங்கேற்றனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !