/
கோயில்கள் செய்திகள் / 66 கிலோ தங்கம் 335 கிலோ வெள்ளி நகைகளால் ஜொலிக்கும் விநாயகர்; ரூ.703 கோடியில் காப்பீடு
66 கிலோ தங்கம் 335 கிலோ வெள்ளி நகைகளால் ஜொலிக்கும் விநாயகர்; ரூ.703 கோடியில் காப்பீடு
ADDED :1 hours ago
மும்பை; மும்பையைச் சேர்ந்த ஜிஎஸ்பி சேவா மண்டல் விநாயகர் சிலைக்கு 66 கிலோ தங்கம், 335 கிலோ வெள்ளி நகைகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்க உள்ளது.
மும்பையைச் சேர்ந்த ஜிஎஸ்பி சேவா மண்டல் தனது 72வது மகா விநாயகர் சதுர்த்தி விழாவை செப்டம்பர் 14 முதல் 18 வரை கொண்டாட உள்ளது. பக்தர்கள் காணிக்கையாக கொடுத்த 66 கிலோ தங்கம், 335 கிலோ வெள்ளி நகைகளால் அலங்கரிக்கப்பட்டு, மகா கணபதி, விநாயகர் சதுர்த்தி நாளில் காட்சியளிக்க உள்ளார். இந்த விநாயகர் சிலைக்கு பக்தர்கள் மற்றும் அமைப்பின் சொத்துக்களின் பாதுகாப்பிற்காக, ரூ 703.27 கோடி மதிப்பிலான காப்பீட்டு செய்யப்பட்டுள்ளது. இச்சிலை 66 கிலோவிற்கும் அதிகமான தங்க ஆபரணங்கள், 335 கிலோ வெள்ளி மற்றும் விலையுயர்ந்த ரத்தினக் கற்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளதாக அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் புஜங் பை தெரிவித்துள்ளார்.