உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமேஸ்வரம் கோயிலில் மோட்ச தீபம் ஏற்றி வழிபட்ட வி.எச்.பி.,யினர்

ராமேஸ்வரம் கோயிலில் மோட்ச தீபம் ஏற்றி வழிபட்ட வி.எச்.பி.,யினர்

ராமேஸ்வரம்: தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர் எஸ்.வேதாந்தம் மறைவு யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் வி.எச்.பி.,யினர் மோட்ச தீபம் ஏற்றினர். ஆக., 29ல் தமிழ்நாடு வி.எச்.பி., தலைவரும், கிராம கோயில் பூசாரிகள் பேரவை தலைவர் எஸ்.வேதாந்தம் உயிரிழந்தார். இவரது ஆன்மா சாந்தி அடைய வேண்டி இன்று மாலை ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் கிழக்கு நுழைவு வாசல் அருகில் வி.எச்.பி., ராமநாதபுரம் மண்டல தலைவர் சரவணன் தலைமையில் வி. எச்.பி., நிர்வாகிகள் மோட்ச தீபம் ஏற்றி சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !