உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீ சுடலை மகாராஜா கோவில் பொங்கல் விழா துவங்கியது

ஸ்ரீ சுடலை மகாராஜா கோவில் பொங்கல் விழா துவங்கியது

அனுப்பர்பாளையம்: பி.என்.ரோடு, அண்ணா நகர் மேற்கு, தியாகி குமரன் காலனியில் உள்ள ஸ்ரீ கரை சுடலைமாடசாமி, ஸ்ரீ முண்டசுவாமி, ஸ்ரீ ராஜகாளியம்மன், ஸ்ரீ பத்திரகாளியம்மன், ஸ்ரீ முத்தாரம்மன், ஸ்ரீபேச்சியம்மன் மற்றும் ஸ்ரீ பிரம்மசக்தி அம்மன் கோவில்களின் 20ம் ஆண்டு பொங்கல் விழா கடந்த 5-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

நேற்று முன்தினம் மாலை, ஆயிரக்கணக்கான பக்தர்கள் முளைப்பாலிகை எடுத்து மேள தாளம் முழங்க ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இன்று (8-ம் தேதி) காலை தீர்த்தக்குட ஊர்வலம், மதியம் உச்சிக்கால பூஜை, கணியான் அழைப்பு,இரவு சுவாமிகளுக்கு சிறப்பு அலங்கார பூஜை, மாலையில், மாசான சுடலை ஈஸ்வர் மயான வேட்டைக்கு செல்லுதல், சுடலை மகாராஜா கொதிக்கும் சுடுநீரில் குளித்தல் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

நாளை (9-ம் தேதி) காலை பக்தர்கள் மாவிளக்கு ஊர்வலம், பொங்கல் வைத்தல், இரவு கம்பம் கங்கையில் சேர்க்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 10-ம் தேதி மதியம் அம்மன் திருவீதி உலா, மஞ்சள் நீராட்டு விழாவுடன் பொங்கல் விழா நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !