உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீ அனுமந்தராயர் கோவில் கும்பாபிஷேகம்

ஸ்ரீ அனுமந்தராயர் கோவில் கும்பாபிஷேகம்

கருவலுார்: கருவலுாரில் உள்ள ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ அனுமந்தராயர் கோவிலில் கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது.

கும்பாபிஷேக விழாவையொட்டி, மாரியம்மன் கோவிலில் இருந்து அரசமர விநாயகர் கோவிலுக்கு 200க்கும் மேற்பட்ட பெண்கள் தீர்த்தம் மற்றும் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக சென்றனர்.

தொடர்ந்து, கணபதி ஹோமம், பஞ்சகவ்யம், வாஸ்து சாந்தி, முதல் கால யாக பூஜை மற்றும் மகா பூர்ணாஹூதி நடைபெற்றது.

நேற்று காலை சுப்ரபாதம், திருப்பாவை, திருப்பள்ளி எழுச்சியுடன் இரண்டாம் கால யாக பூஜை துவங்கியது. தொடர்ந்து, சர்வ காயத்ரி ஹோமம், கலச புறப்பாடு நடைபெற்றது.

பின்னர், கோபுர விமான கலசங்களுக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, மஹா அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.

விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் தர்மராஜ், அறங்காவலர்கள் சிவகுமார், ஜெயந்தி, சின்னசாமி, சுரேஷ் மற்றும் ஊர் பொதுமக்கள்செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !