உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காளஹஸ்தி சிவன் கோயில் மிருத்யுஞ்சய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்

காளஹஸ்தி சிவன் கோயில் மிருத்யுஞ்சய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்

காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் வளாகத்தில் வீற்றிருக்கும்  மிருத்யுஞ்சய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. கோவிலில், வேத மந்திரங்கள் முழங்க,  ம்ருத்யுஞ்சய சுவாமிக்கு பக்தியுடன் புனித நீர், பால், தயிர், தேன், நெய், இளநீர், சந்தனம், வில்வ இலைகள் மற்றும் நறுமணப் பொருட்களைக் கொண்டு சுவாமிக்கு மகாபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர், சிறப்பு அர்ச்சனைகளும் மகா தீப ஆரத்தியும் நடைபெற்றது. மகா ம்ருத்யுஞ்சய மந்திரம் முழங்க நடைபெற்ற இந்த அபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். அனைத்து மக்களின் நல்வாழ்வு, மகிழ்ச்சி மற்றும் நல்ல ஆரோக்கியத்திற்காக கோயில் அர்ச்சகர்கள் இந்த சிறப்புப் பூஜைகளைச் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !