உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி தேரோட்டம் கோலாகலம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி தேரோட்டம் கோலாகலம்

திருச்செந்தூர் ; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித் திருவிழாவில் இன்று தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் அரோகரா கோசத்துடன் வடம்பிடித்து தேரை இழுத்தனர்.


முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெறக்கூடிய முக்கிய திருவிழாக்களில் ஒன்றானது ஆவணித் திருவிழா. இந்த ஆண்டு ஆனித் திருவிழா கடந்த மாதம் 31ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி தொடர்ந்து கோலாகலமாக நடைபெற்று வருகிறது. திருவிழா காலங்களில் தினசரி சுவாமியும், அம்பாளும் வெவ்வேறு வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். 12 நாட்கள் நடைபெறும் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான 10-ம் திருநாள் தேரோட்டம் இன்று காலையில் நடைபெற்றது. இதனை முன்னிட்டு இன்று அதிகாலை 5 மணிக்கு கோவில் நடைதிறக்கப்பட்டு, 5.30 மணிக்கு விசுவரூப தீபாரானையும்,  6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடந்தது. தொடந்து சுவாமி குமரவிடங்க பெருமான், வள்ளி-தெய்வானை அம்பாளுடன் தேரில் எழுந்தருளினார். முதலில் விநாயகர் தேர் புறப்பட்டு 4 ரதவீதிகளையும் சுற்றி நிலையம் வந்தது. அதனை தொடர்ந்து சுவாமி குமரவிடங்க பெருமான், வள்ளி-தெய்வானை அம்பாளுடன் எழுந்தருளிய தேர் புறப்பட்டது. இதனை ஏராளமான பக்தர்கள் அரோகரா கோசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். இந்த தேரானது 4 வீதிகளிலும் வளம் வந்து நிலையம் வந்தடைந்தது.  அதனைத் தொடர்ந்து வள்ளியம்பாள் எழுந்தருளிய தேரை பக்தர்கள் அரோகரா கோசத்துடன் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர் இந்த தேரானது நான்கு வீதிகளிலும் வலம் வந்து நிலையம் வந்தடைந்தது. திருச்செந்தூர் டிஎஸ்பி மகேஷ்குமார் தலைமையில் 100 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !