கள்ளக்குறிச்சியில் தங்க கருட வாகனத்தில் வேணுகோபால சுவாமி வீதிஉலா
ADDED :19 minutes ago
கள்ளக்குறிச்சி; திருக்கோவிலூர் நகர் பகுதியில், இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த திருவிக்கிரமசுவாமி எனும் உலகளந்த பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் கிருஷ்ண ஜெயந்தியை தொடர்ந்து ஸ்ரீ ஜெயந்தி உற்சவம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு 3ம்தேதி ஸ்ரீ ஜெயந்தி உற்சவம் தொடங்கியது.இதில் ஐந்தாம் நாள் நிகழ்வாக தங்க கருட வாகன சேவை நடைபெற்றது. இதில் இரவு ஸ்ரீவேணுகோபால சுவாமி எழுந்தருளி கோவிலின் நான்கு மாட வீதிகள் வழியாக சுற்றி வந்தார். இந்நிகழ்வில் திருக்கோவிலூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள திரளான பக்தர்கள் கண்டு கோவிந்தா கோவிந்தா என முழக்கமிட்டு சாமி தரிசனம் செய்தனர்.