பல்லடம்: ஸ்ரீசத்யசாய் பிரேம ரதத்துக்கு பக்தர்கள் உற்சாக வரவேற்பு
ADDED :18 minutes ago
பல்லடம்: பல்லடத்துக்கு வருகை தந்த ஸ்ரீசத்யசாய் பிரேம ரதத்துக்கு சாய் பக்தர்கள் உற்சாகத்துடன் வரவேற்பு அளித்தனர்.
ஸ்ரீ சத்யசாய் பாபாவின், 100வது பிறந்தநாளை முன்னிட்டு, சத்யசாய் பிரேம ரதம் நாடு முழுவதும் யாத்திரையாக சென்று வருகிறது.
திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இந்த ரதம் சென்று வந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு, பல்லடம் பொன்காளியம்மன் கோவிலுக்கு வந்தது. தகவல் அறிந்த ஸ்ரீசத்யசாய் பாபா பக்தர்கள், ரதத்துக்கு மலர் துாவி வரவேற்றனர்.
முன்னதாக, ரதத்தில் வைக்கப்பட்டிருந்த சத்ய சாய்பாபாவின் பாதுகைகளை பக்தர்கள் பயபக்தியுடன் வணங்கினர். பஜனைகள், பாடல்கள் பாடியபடி, பக்தர்கள் ரதத்துக்கு உற்சாகத்துடன் வரவேற்பு அளித்தனர்.
தீபாராதனையை தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.