உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாகூர் கோவிலில் பிரதோஷ வழிபாடு

பாகூர் கோவிலில் பிரதோஷ வழிபாடு

பாகூர்: பாகூர் வேதாம்பிகை சமேத மூலநாதர் சுவாமி கோவிலில், நேற்று பிரதோஷ வழிபாடு நடந்தது.

பாகூரில் 1400 ஆண்டுகள் பழமையான வேதாம்பிகை சமேத � மூலநாதர் கோவில் உள்ளது. இக்கோயிலில் நேற்று பிரதோஷ வழிபாடு நடந்தது. இதையொட்டி, காலை 9:00 மணிக்கு வேதாம்பிகை யம்மன், மூலநாதர், பால விநாயகர், முருகர், சண்டி கேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், மாலை 4:30 மணிக்கு செல்வ நந்தி பெருமானுக்கு பால், தயிர், தேன், சந்தனம் உள்ளிட்டவை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

சகஸ்ர நாம அர்ச்சனை செய்யப்பட்டு, மாலை 6:00 மணிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. ஏற்பாடுகளை, கோவில் நிர்வாக அதிகாரி சிவக்குமார், சிவாச்சார்யார்கள் சங்கர நாராயணன், பாபு ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !