உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புரக்கோட்டை காளியம்மன் கோயிலில் மண்டல பூஜை துவக்கம்

புரக்கோட்டை காளியம்மன் கோயிலில் மண்டல பூஜை துவக்கம்

நயினார்கோவில்: பரமக்குடி அருகே நயினார்கோவில் ஒன்றியம் காரடர்ந்தகுடி புரக்கோட்டை காளியம்மன் கோயிலில் மண்டல பூஜை துவங்கியது.

கோயிலில் செப்.,7 கும்பாபிஷேக விழா நிறை வடைந்தது.

தொடர்ந்து நேற்று மாலை மண்டல பூஜை விழா துவங்கியது. இதன்படி தினமும் 48 நாட்களுக்கு அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள் நடைபெற உள்ளது. அப்போது பல்வேறு திரவியங்கள், பால், பன்னீர், இளநீர் ஆகிய அபிஷேகங்கள் நடந்தது.

பின்னர் அலங்கரிக்கப்பட்ட அம்மனுக்கு பல்வேறு பிரசாதங்கள் படைக்கப்பட்டு பக்தர் களுக்கு வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஆண்டி பண்டாரத்தார் சமூக சபை மற்றும் விழாக் குழுவினர் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !