உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரை மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: வைகை ஆற்றில் இருந்து தங்க குடத்தில் புனித நீர்

மதுரை மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: வைகை ஆற்றில் இருந்து தங்க குடத்தில் புனித நீர்

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வேத மந்திரங்கள் முழங்க வைகை ஆற்றில் இருந்து மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு யானை மூலம் தங்க குடத்தில் கொண்டுவரப்பட்ட புனித நீர் கொண்டுவரப்பட்டது. 


உலகப் பிரசித்தி பெற்ற அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலய குடமுழுக்கு விழா 17ம் தேதி வெகு விமர்சனம் நடைபெற உள்ள நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சித்தி விநாயகர் சன்னதியில் கணபதி ஹோமத்துடன் விழா துவங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் ஒவ்வொரு நாளும் விசேஷ பூஜைகளும் வேள்விகளும் காலை மற்றும் மாலை வேளையில் நடைபெற்று வரக்கூடிய நிலையில் நான்காம் நாளான இன்று கோவில் வளாகத்தில் இருந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கோவில் யாணையுடன் ஊர்வலமாக வருகை தந்து மதுரை வைகை ஆற்றின் தென்கரைப் பகுதியில் தங்க கடத்தில் (குடம்) புனித நீர் எடுத்து யானை மீது சிவாச்சாரியார் அமர்ந்து ஊர்வலமாக கோவிலுக்கு சென்று அங்கே சிறப்பு வேள்விகளின் போது அந்த புனித நீர் பூஜைக்கு பயன்படுத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலநது கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !