உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வல்லக்கோட்டை முருகனுக்கு சிறப்பு மந்திர புஷ்ப அர்ச்சனை

வல்லக்கோட்டை முருகனுக்கு சிறப்பு மந்திர புஷ்ப அர்ச்சனை

ஸ்ரீபெரும்புதுார்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில், ஆவணி மாத நான்காம் செவ்வாய் கிழமையான நேற்று, சிறப்பு மந்திர புஷ்ப அர்ச்ச னை நடந்தது.


ஸ்ரீபெரும்புதுார் அருகே, வல்லக்கோட்டை முருகன் கோவில் அமைந்துள்ளது. 1,200 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த இக்கோவிலில், ஏழு அடி உயரத்தில் வள்ளி, தெய்வானையுடன் – முருகன் அருள் பாலிக்கிறார். இக்கோவிலில், ஆவணி மாத நா ன்காம் செவ்வாய் கிழமையான நேற்று, மூலவருக்கு பால், தயிர், மஞ்சள், விபூதி உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றுது. தொடர்ந்து, சிறப்பு மலர் அலங்காரத்தில் மூலவர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதேபோல, சஷ்டி மண்டபத்தில் உற்சவர் முருகனுக்கு பால் அபிஷேகத்தை தொடர்ந்து, சிறப்பு மந்திர புஷ்ப அர்ச்சனை நடந்தது. பின்னர், சிறப்பு மலர் அலங்காரத்தில் உற்சவர் முருகன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !