உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மானாமதுரையில் ஆட்டம்,பாட்டத்துடன் ஊர்வலம் சென்று விநாயகர் சிலைகள் விசர்ஜனம்

மானாமதுரையில் ஆட்டம்,பாட்டத்துடன் ஊர்வலம் சென்று விநாயகர் சிலைகள் விசர்ஜனம்

மானாமதுரை: மானாமதுரையில் 80க்கும் மேற்பட்ட இடங்களில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகளை ஆட்டம் ,பாட்டத்துடன் ஊர்வலமாக கொண்டு சென்று அலங்கார குளத்தில் கரைத்தனர்.


மானாமதுரையில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு கடந்த 3 நாட்களுக்கு முன்னதாகவே பழைய தபால் ஆபீஸ் தெரு மாரியம்மன் கோவில் தெரு, ராம்நகர், சாஸ்தா நகர், அண்ணாமலை நகர், கன்னார் தெரு உள்ளிட்ட நகரில் உள்ள பெரும்பாலான தெருக்களிலும் அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் சார்பில் மெகா சைஸ் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்தனர். நேற்று முன்தினம் விநாயகர் சதுர்த்தி அன்று காலை முதலே விநாயகருக்கு அபிஷேக, ஆராதனைகள் பூஜைகள் செய்து அன்னதானம் வழங்கினர். மாலை நேரங்களில் விளையாட்டுப் போட்டிகள்,நடனம், நாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. ஹிந்து முன்னணி, பா.ஜ.,சார்பிலும் பழைய பஸ் ஸ்டாண்டு, ரயில்வே காலனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இன்று காலை முதல் நகரின் முக்கிய வீதிகளின் வழியே விநாயகர் சிலைகளை வாகனங்களில் ஏற்றி ஊர்வலமாக ஆட்டம்,பாட்டத்துடன் தாயமங்கலம் ரோட்டில் உள்ள அலங்கார குலத்திற்கு சென்று கரைத்தனர். விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி மானாமதுரை போலீஸ் டி.எஸ்.பி., லோகநாதன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !