கடலுார் சித்தி விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை
ADDED :8 hours ago
கடலுார்: கடலுார், பாதிரிக்குப்பம் குலசேகர அம்மாள் நகரில் உள்ள சித்தி விநாயகர் கோவிலில் 9ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி சிறப்பு பூஜை நடந்தது. அதனையொட்டி நேற்று மாலை விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. மூலவர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தொடர்ந்து, உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடைபெற்றது. கூத்தப்பாக்கம்: எல்.ஐ.சி., நகரில் உள்ள சர்வ சக்தி விநாயகர் கோவிலில் காலை மூலவருக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் தீபாராதனை நடந்தது. மாலை உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடைபெற்றது.