உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தீவனுார் பொய்யாமொழி விநாயகருக்கு சிறப்பு பூஜை

தீவனுார் பொய்யாமொழி விநாயகருக்கு சிறப்பு பூஜை

திண்டிவனம்: தீவனுார் விநாயகர் கோவிலில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. 


திண்டிவனம்–செஞ்சி ரோடு, தீவனுார் கிராமத்தில் சுயம்பு பொய்யாமொழி விநாயகர் கோவில் உள்ளது. இந்த  கோவிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு காலை  5 மணிக்கு விநாயகருக்கு மகா அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. இதில் பல்வேறு பகுதிகளிலிருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.  தொடர்ந்து மாலை 5 மணியளவில் விநாயகருக்கு திரவியப்பொடி, மஞ்சள், பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், வாசனை திரவியங்களால் மகா அபிேஷகம் நடந்தது. மாலை உற்சவமூர்த்தி சிறப்பு  அலங்காரத்தில் உட்பிரகாரம் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து விநாயகர் சிறப்பு அலங்காரத்துடன் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. விழா ஏற்பாடுகளை அறங்காவலர் மணிகண்டன் செய்திருந்தார்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !