உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்; எட்டாம் கால யாகசாலை பூஜை துவக்கம்

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்; எட்டாம் கால யாகசாலை பூஜை துவக்கம்

மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் திருக்குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழாவில் எட்டாம் கால யாகசாலை பூஜை இன்று செவ்வாய்க்கிழமை காலை 08.30 மணிக்கு  துவங்கி நடைபெற்று வருகிறது. யாகசாலையில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.


மதுரை; உலகப் பிரசித்தி பெற்ற அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு 16ஆம் தேதி பரிவார மூர்த்திகளுக்கும் 17ஆம் தேதி கோவில் கோபுரங்களுக்கும் குடமுழுக்கு விழா வெகு விமர்சையாக நடைபெற உள்ள நிலையில் இன்று காலை மங்கள இசை தொடர்ந்து எட்டாம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. அன்னை மீனாட்சி சுந்தரேஸ்வரர் யாக சாலை பூஜையில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்து வரக்கூடிய நிலையில் மூலவர் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதால் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து யாகசாலை பூஜைக்கு வருகை தந்து பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்து செல்கின்றனர். கும்பாபிஷேகத்தை காண லட்சக்கணக்கானோர் வருவர் என்பதால், அதற்கேற்ப முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !