மந்தாரக்குப்பம் வெற்றி விநாயகர் கோவிலில் திருவிளக்கு பூஜை
ADDED :13 hours ago
மந்தாரக்குப்பம்: மந்தாரக்குப்பம் வெற்றி விநாயகர் கோவிலில் 33 ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவில் திருவிளக்கு பூஜை நடந்தது.
அதனையொட்டி நேற்று சுவாமிக்கு சிறப்பு சந்தன அலங்காரம் செய்து 1,008 அர்ச்சனை நடந்தது.
தொடர்ந்து உலக நன்மை வேண்டி நேற்று இரவு 7;00 மணியளவில் திருவிளக்கு பூஜை நடந்தது. திருவிளக்கு பூஜையில் 200 க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.