ஆனைமலை: அகத்தீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம்
ADDED :16 hours ago
ஆனைமலை: ஆனைமலை அருகே அங்கலகுறிச்சி கால்வாய் மேடு அகத்தீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் திறந்த வெளியில் இருந்த சிவபெருமானுக்கு, ஒரு லட்சத்து, 75 ஆயிரம் ருத்ராட்சங்களால் பந்தல் அமைக்கப்பட்டது. இதை தொடர்ந்து, கும்பாபிஷேக விழா நேற்றுமுன்தினம் நடந்தது. புண்ணிய தீர்த்தம் அங்குள்ள, 18 சித்தர்கள், பாலாம்பிகை, முருகன், விநாயகர் போன்ற தெய்வங்களுக்கு ஊற்றப்பட்டது. சிறுவர், சிறுமியர் கலசங்கள் எடுத்துச்சென்று வழிபட்டனர். தொடர்ந்து, அகத்தியர், அகத்தீஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இந்த கும்பாபிஷேக நிகழ்ச்சியில், அங்கலக்குறிச்சி மற்றும் சுற்றுப்புற கிராமங்களிலிருந்து நுாற்றுக்கணக்கான பக்தர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.