பேரூர் அனுமந்தராயர் சுவாமி கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்
ADDED :2 days ago
பேரூர்: பேரூர் பட்டீஸ்வரர் சுவாமி கோயிலின் உபகோயிலாக பேரூர் அனுமந்தராயர் சுவாமி கோயில் உள்ளது. பாலாலயம் செய்யப்பட்டு 2 ஆண்டுகளாக கோயில் கட்டுமான வேலை நடந்து வந்தது. நேற்றுமுன்தினம் கும்பாபிஷேகம் துவங்கியது. நேற்று அதிகாலை 4:00 மணிக்கு, திருமஞ்சனம் மற்றும் சிறப்பு அலங்காரம் நடந்தது. 6:00 மணிக்கு நடந்த இரண்டாம் கால யாக பூஜைப் பின் யாகசாலை மண்டபத்தில் இருந்து, புனித நீர் கலசங்கள் எடுத்துவரப்பட்டன. பின், மங்கள வாத்தியங்கள் முழங்க, விமான கலசம் மற்றும் அனுமந்தராயர் சுவாமிக்கு மஹா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. காலை 8:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.