உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குருவாயூர் கோவில் புதிய மேல்சாந்தியாக பழையத்து சதீசன் நம்பூதிரி தேர்வு

குருவாயூர் கோவில் புதிய மேல்சாந்தியாக பழையத்து சதீசன் நம்பூதிரி தேர்வு

பாலக்காடு: குருவாயூர் கிருஷ்ணர் கோவில் மேல்சாந்தியாக, பழையத்து சதீசன் நம்பூதிரி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


கேரள மாநிலத்தில், பிரசித்தி பெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், ஆறு மாதங்களுக்கு ஒரு முறை மேல்சாந்தி (தலைமை அர்ச்சகர்) தேர்வு நடக்கிறது. ஆக். மாதம் முதல் ஆறு மாதத்துக்கான மேல்சாந்தி தேர்வு நேற்று கோவில் நமஸ்காரம் மண்டபத்தில் நடந்தது. தேவஸ்தான நிர்வாக குழு தலைமையில் நடந்த நேர்முகத் தேர்வில், தகுதி பெற்ற, 33 விண்ணப்ப தாரர்களின் பெயர்களை பேப்பரில் எழுதி, வெள்ளி குடத்தில் போட்டு குலுக்கல் முறையில் தேர்வு நடந்தது. இதில், பழையத்து சதீசன் நம்பூதிரி மேல்சாந்தியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். கோவில் தந்திரி தினேசன் நம்பூதிரிப்பாடு, தற்போதைய மேல்சாந்தி நாராயணன் நம்பூதிரி, தேவஸ்தான நிர்வாக குழு தலைவர் கோபிநாத், நிர்வாக குழு உறுப்பி னர்களான பரமேஸ்வரன் நம்பூதிரிப்பாடு, நிர்வாக அதிகாரி ஹரிகோபால் ஆகியோர் முன் னிலையில், மேல்சாந்தி தேர்வு நடந்தது. கோவிலின் ‘ஓதிக்கன்’ குடும்பத்தைச் சேர்ந்த சதீசன் நம்பூதிரி, முன்னதாக, 2014 ஏப். முதல் செப். வரையிலும், பின்னர் கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில் 2020 ஏப். முதல் அக். வரையிலும் இவர் மேல்சாந்திப் பொறுப்பை ஆற்றியுள்ளார். கணிதத்தில் இளங்கலைப் பட்டம் (B.Sc Maths) பெற்றுள்ள 58 வயதான சதீசன் நம்பூதிரி, பொட்டக்குழி நாராயணன் நம்பூதிரியிடம் தாந்திரீக முறைகளைக் கற்றவர். இவரது மனைவி ஷீஜா அந்தர்ஜனம்; மகள்கள் ஸ்ரீரஞ்சனி (ஆயுர்வேத மருத்துவர்), ஸ்ரீவித்யா (மென்பொருள் பொறியாளர்).


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !