உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மழை பெய்ய வேண்டி வருண பகவானுக்கு ஜலத்தின் மீது அமர்ந்து சிவாச்சாரியார்கள் யாகம்

மழை பெய்ய வேண்டி வருண பகவானுக்கு ஜலத்தின் மீது அமர்ந்து சிவாச்சாரியார்கள் யாகம்

அவிநாசி: அவிநாசி அருகே மழை பெய்ய வேண்டி ஜலத்தின் மீது அமர்ந்து யாகம் நடைபெற்றது.


அவிநாசி அடுத்த நல்லி கவுண்டன்பாளையம் புதூர் பகுதியில் எழுந்தருளியுள்ள பகவதி அம்மன் கோவிலில் மழை பெய்ய வருண பகவானை வேண்டி ஜலத்தின் மீது சிவாச்சாரியார்கள் அமர்ந்து யாகம் செய்தனர். முன்னதாக நேற்று பகவதி அம்மன் கோவிலுக்கு 50-க்கும் மேற்பட்ட பெண்கள் தீர்த்த குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர். அதனைத் தொடர்ந்து முதல் கால யாக பூஜைகள் நடைபெற்றது. இன்று இரண்டாம் கால பூஜைகள் நடைபெற்று வருண பகவானை வேண்டி,1008 முறை வருண மந்திர ஜபங்கள் உச்சரிக்கப்பட்டு சிவாச்சாரியர்கள் ஜலத்தின் மீது அமர்ந்து யாகம் செய்தனர். மழை வேண்டி ஜலத்தின் மீது அமர்ந்து நடைபெற்ற யாகத்தை பகவதி அம்மன் கோவில் கமிட்டியின் சார்பில் தலைவர் வடிவேல் தலைமையில் ஊர் பொதுமக்கள் உள்ளிட்டோர் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !