உளுந்தூர்பேட்டை ஆதிகேசவ பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை
ADDED :20 hours ago
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ஸ்ரீ கனகவல்லி சமேத தாயார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது.
உளுந்தூர்பேட்டை ஸ்ரீ கனகவல்லி சமேத தாயார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமையொட்டி மூலவருக்கு பால், தயிர், சந்தனம், விபூதி, பன்னீர் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் நடந்தன. பின்னர் சிறப்பு திருமஞ்சனம், பூஜைகள் நடந்தது. அதனை தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதனை வழிபாடு நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.