திருப்பதி பாத யாத்திரைக்கு பக்தர்கள் மாலை அணிந்து விரதம்
புதுச்சேரி: வெங்கடேச பெருமாள் பக்த ஜன சபா சார்பில், 34ம் ஆண்டு திருப்பதி, திருமலை பாதயாத்திரைக்கு, மாலை அணிந்து விரதம் இருக்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் துவங்கியது.
புதுச்சேரி, வெங்கடேச பெருமாள் பக்தஜன சபா சார்பில், 34ம் ஆண்டு திருப்பதி திருமலை பாதயாத்திரை வரும் 4ம் தேதி காலை 5:00 மணிக்கு திருச்சிற்றம்பலம் தனியார் திருமண நிலையத்திலிருந்து புறப்படுகிறது.
இதையொட்டி, புரட்டாசி மாதம் 1ம் தேதியை முன்னிட்டு, பாரதி பூங்காவில் அமைந்துள்ள பிரசன்னா வெங்கடேச பெருமாள் கோவிலில் மாலை அணிவித்து விரதம் இருக்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் (18 ம் தேதி) நடந்தது. வெங்கடேச பெருமாள் பக்தஜன சபா தலைவர் ஜெயச்சந்திரன், முருகமணி தலைமையில் பக்தர்கள் மாலை அணிவித்து விரதத்தை துவக்கினர்.
இதில், பூபதி, ஜெகநாதன், மதுரகவி ராமானுஜதாசன், கணபதி, சிவராமன், பாபு, ஜெயமூர்த்தி, பாலாஜி, செந்தில், ஆனந்தன், சிவராஜ், ஏழுமலை, செங்குட்டுவன், பிரகாஷ் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.