உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆஞ்சநேயருக்கு தங்க கவச அலங்காரம்

ஆஞ்சநேயருக்கு தங்க கவச அலங்காரம்

மேட்டுப்பாளையம்: புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமை விழாவில், ஆஞ்சநேயருக்கு தங்க கவச அலங்காரம் செய்யப்பட்டது.

மேட்டுப்பாளையம் – அன்னூர் சாலையில், தாளத்துறை டி.ஆர்.எஸ்., ஹைவே சிட்டி நகரில், அபீஷ்ட வரத ஆஞ்சநேயர் சுவாமி கோவில் உள்ளது. புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமை விழாவை முன்னிட்டு, கோவில் நடை காலை 5:00 மணிக்கு திறக்கப்பட்டது.

ஆஞ்சநேயர் சுவாமிக்கு தங்க கவசம் அணிவித்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. 5:30 மணிக்கு பக்தர்கள் வழிபாட்டுக்கு விடப்பட்டது. திரளான பக்தர்கள் ஆஞ்சநேயரை வழிபட்டு சென்றனர். அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோவில் அர்ச்சகர் ரிஷி பட்டர் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !