உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீ சாய் பிரேம ரத யாத்திரை நிறைவு

ஸ்ரீ சாய் பிரேம ரத யாத்திரை நிறைவு

திருப்பூர்: பகவான் ஸ்ரீ சத்ய சாய் நுாற்றாண்டு விழா முன்னிட்டு ஸ்ரீசத்ய சாய் பிரேம ரத வடிவமைக்கப்பட்டு பல்வேறு பகுதிகளிலும் பக்தர்கள் தரிசனத்துக்காக வலம் வந்தது.

பகவான் சாய்பாபா போதித்த, அன்பு, சேவை, அமைதி, தர்மம் மற்றும் ஒற்றுமை ஆகியவற்றை உணர்த்தும் வகையில், ஊர்தோறும், வீடு தோறும் சென்று மக்களுக்கு இந்த கருத்துகளை சேர்க்கும் விதமாகவும் இந்த ரத யாத்திரை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கடந்த, ஆக. 26ம் தேதி திருப்பூர் வருகை தந்த ரதத்துக்கு ராம்நகர் பகுதியில் பக்தர்கள் உற்சாகத்துடன் வரவேற்பு அளித்தனர்.

தொடர்ந்து, தினமும் பல்வேறு பகுதிகளில் பஜன் மண்டல்கள், பல்வேறு பள்ளிகள் அமைப்புகள் சார்பிலும் பல்வேறு இடங்களில் வரவேற்பு மற்றும் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றன.

பிரமே ரதத்தின் திருப்பூர் மாவட்ட யாத்திரை நிறைவாக, பெருந்தொழுவு கவுண்டம்பாளையம், சாய் சிற்பி பள்ளி வளாகத்தில் வரவேற்பு மற்றும் சிறப்பு பஜன் நடைபெற்றது. நிகழ்ச்சியில், திரளான சாய் பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !