உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஏரியூரில் பழமையான கல்வெட்டு

ஏரியூரில் பழமையான கல்வெட்டு

சிவகங்கை: மதகுபட்டி அருகே உள்ள ஏரியூரில் 700 ஆண்டு பழமையான கல்வெட்டு தொல்நடைக்குழுவினரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 


இந்தியத் தொல்லியல் துறை அலுவலர் முத்துக்குமார், ஏரியூர் மலைப்பகுதியில் 19 ஆண்டுகளுக்கு முன்னாள் கல்வெட்டு ஒன்றை பார்த்ததாக தெரிவித்த தகவலின் அடிப்படையில் அவரோடு இணைந்து சிவகங்கை தொல்நடை குழுவினர் காளிராசா, தொல்லியல் மாணவர் கருணாகரன், பாலசுந்தரம், சஞ்சீவிநாதன் ஆகியோர் ஏரியூர் மலை பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டனர். ஏரியூர் மருந்தீஸ்வரர் கோவில் அமைந்துள்ள மலையில் உலகம்பட்டி பகுதியில் இருந்து மலைக்கு செல்லும் பாதையில் காட்டுப் பகுதியில் வணிகக் குழுவினர் பெயரை கால்வாய்க்கு வைத்துள்ள 700 ஆண்டு பழமையான கட்வெட்டு இருப்பதை கண்டு பிடித்தனர்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !