உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திம்மராய பெருமாள் கோவிலில் புரட்டாசி திருக்கல்யாண உற்சவ விழா

திம்மராய பெருமாள் கோவிலில் புரட்டாசி திருக்கல்யாண உற்சவ விழா

கோவை; காரமடை அருகே கா.புங்கம்பாளையத்தில் உள்ள திம்மராய பெருமாள் கோவிலில் புரட்டாசி மாதம் திருவோண நட்சத்திரத்தில் திருக்கல்யாண உற்சவ விழா நடைபெற்றது. 


இதில் காலை 9 மணிக்கு அபிஷேக அலங்கார பூஜை நடைபெற்றது 10 மணிக்கு அம்மன் அலைக்கும் நிகழ்வு பஜனை மற்றும் மதியம் 1.30 மணிக்கு மணிக்கு திருக்கல்யாண உற்சவமும் பின்னர் 3 மணிக்கு அருள்மிகு திம்மராய பெருமாள் கருடவாகனத்தில் திருவீதி உலா நடைபெற்றது .  திம்மராய பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது இந்த உற்சவத்தில் ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் மற்றும் 30க்கு மேற்பட்ட ஊர்களைச் சேர்ந்த பெள்ளீர் மற்றும் கெந்தேர் குலம் ஆரநாட்டார் குலமக்கள் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !