உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உதவி செய்ய சொல்கிறார்: காஞ்சி மஹாபெரியவர்

உதவி செய்ய சொல்கிறார்: காஞ்சி மஹாபெரியவர்

* உன்னிடம் என்ன உள்ளதோ அதைக் கொண்டு பிறருக்கு உதவி செய்.
* தினமும் ஏதேனும் ஒரு நல்ல செயல் செய். மனம் சுத்தமாகும்.
* எதற்கும் பதட்டப்படாதே. நடப்பது நடந்தே தீரும்.
* முன்னோர்கள் நடந்த பாதையில் நடந்து செல்.  
* உண்மை பாதையில் சென்றால் கடவுளைக் காணலாம்.
* மனதை அலை பாய விடாதே. அதை ஒரு இடத்தில் நிறுத்து.
* நல்லதை செய்யத் தயங்காதே. தைரியமாக அதைச் செய்.  
* உன் வருமானத்திற்கு ஏற்றபடி குடும்பம் நடத்தப் பழகு.
* மனதில் அமைதி இருந்தால்தான் சேவையில் ஈடுபட முடியும்.  
* ஒருவருக்கு எவ்வளவுதான் கொடுத்தாலும் மனம் திருப்தி அடையாது.
* உன் குடும்பத்தை முதலில் கவனி. பிறகு சமூகத்திற்கு தொண்டு செய்.  
* நல்ல எண்ணத்துடன் செய்யும் செயலுக்கு போட்டி, பொறாமை இருக்காது.
* சர்க்கரையில் பல பண்டம் செய்வது போல கடவுளும் பல வடிவில் இருக்கிறார்.
* குடும்பத்தினரிடம் பாசமாக இருக்கிறாயா... உன் வீட்டில் கடவுள் இருப்பார்.     
* உன் குறையை கடவுளிடம் கூறுவது போல் நிறையையும் சொல்.
* கடவுள் இசை வடிவானவர். அவரது அருளை இசையாலும் பெறலாம். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !